புதுக்கோட்டை பூசத்துறையில் இன்று தைப்பூசம் விழா!!

756


புதுக்கோட்டை பூசத்துறை வெள்ளற்றாங்கரையில 7 ஊர் சாமிகள் பங்கேற்ற தீர்த்தவாரி திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை பூசத்துறையில் இன்று தைபூச விழா
ஸப்த மூர்த்திகள் தீர்த்தவாரி பக்தர்கள் திரண்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகர எல்லையில்உள்ள வெள்ளாற்றங்கரையில்தைபூசத்தை முன்னிட்டுதீர்த்தவாரி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமானபக்தர்கள் கலந்து கண்டுசாமி தரிசனம் செய்தனர்.


தைபூச விழா உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாள் கோலாகலமாககொண்டாடப்படுகிறது.முருகப் பெருமான்ஆலயங்களிலும்சிவ தலங்களிலும்பக்தர்கள்விரதமிருந்துகாவடிஎடுத்தும், அழகுகுத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
இதே போல் புதுக்கோட்டை பூசத்துறையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இது பற்றிய செவி வழி கதையாக கூறப்படுவதாவது முன்னொரு சமயம் கைலாயத்தில் இருந்த சிவபெருமான் பார்வதிதேவி ஏகாந்த நிலையில் பூலோகசஞ்சாரம் செய்யவிரும்பினர்.பூலோகத்தில்சுவேத (வெள்ளாற்றங்கரைபூசத்துறை) நதியின்அழகில் நீராடி மகிழ்ந்ததாக சொல்லபடுகிறது . அம்மையும்அப்பனுமானசிவபெருமான்பார்வதிநீராடி மகிழ்ந்த நன்னாள் தை திங்கள்பூச நட்சத்திரவேளையாகும் அந்நாளை போற்றும் வகையில் தீர்த்தவாரி நடைபெற்றது.

புதுக்கோட்டை பூசத்துறையில் தைபூசத்தை முன்னிட்டு புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி..,திருவேங்கைவாசல்பெரியநாயகி சமேதர வியாக்ரபுரிஸ்வரர், வெள்ளனூர் பிரகதம்பாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோகர்ணம்பிரகதம்பாள்சமேதரகோகர்ணேஸ்வரர், கோட்டூர் மீனாட்சியம்மன் சமேதர சுந்தரேஸ்வரர், திருமயம் வேணுவனேஸ்வரி உடனுறை சத்தியகிரிஸ்வரர், விராச்சிலை சவுந்தரநாயகி உடனுறை வில்வனேஸ்வரர் ஆகிய சிவஸ்தலங்களிள் இருந்து அம்பாள் சமேதர சிவபெருமாள் வீதியுலாவந்து வெள்ளாற்றங்கரையில் இருபுறமும் எழுந்தருளி தீர்த்தவாரியாடி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது ஐதீகம்.

இந்த ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திர தினமான இன்று ஸப்த ஸ்தலங்களை சேர்ந்த மூர்த்திகள் தீர்த்தவாரியாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.புதுக்கோட்டை பூசத்துறையில் ஆண்டு தோறும் புதுக்கோட்டை, திருமயம்,

விராச்சிலை, திருவேங்கைவாசல்,திருகோகர்ணம் கோட்டூர் ஆகிய ஊர்களைசேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள்விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதில் வெள்ளனூர் கோயிலை சேர்ந்த சுவாமி மற்றும் அம்பாள் உற்சவ மூர்த்திகள் பங்கேற்கவில்லை
இவ்விழாவின் மூலம் பக்தர்கள் பல்வேறு கிராம மக்களிடம் நல்லுறவும் வலுப்படும் என்பது ஐதீகம்..