மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை இயக்குனர் பார்வையிட்டார்!

103

ஆவுடையார் கோவில் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை இயக்குனர் பார்வையிட்டார்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் நடப்பு சம்பா பருவத்தில்17,000 ஹெக்டர் அளவில் நெல் சாகுபடி செய்திருந்தனர் .

கடந்த இரண்டு நாட்களில் ஆவுடையார் கோவில் பகுதியில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள்தண்ணீரில் சாய்ந்து மூழ்கியுள்ளதை பார்வையிடுவதற்காக

இன்று காலை 10 மணி அளவில் ஆவுடையார் தாலுகா பூவலூர் கிராமத்தில் கனமழையால் சாய்ந்து கிடக்கின்ற நெற்கதிர்களை வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை இ ஆ ப அவர்கள் பார்வையிட்டார்கள்.

அவருடன் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி,அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ண ராஜ், அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் மோகன்ராஜ், அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் பத்மபிரியா,ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் வில்லியம்ஸ் மோசஸ்ஆகியோருடன் ஆவுடையார் கோவில்வேளாண்மை அலுவலர்பிரவீனாஅறந்தாங்கி வேளாண்மை அலுவலர் பாக்கியா ஆகியோருடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு வேளாண்மை இயக்குனர் அவர்கள் பாதிக்கப்பட்ட நிலங்கள்சம்மதமாக அரசுக்கு எடுத்துரைப்பேன் என்று கூறிச் சென்றுள்ளார்