ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு:புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.

276

புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பு என்ற தகவல் மாநில சராசரி விகிதத்தை விட குறைவு.

எதிரொலியாக புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்னர் மருத்துவரும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான முத்துராஜா பேட்டி

புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் 247 பிரசவங்களில் குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் ஒருவர் தகவல் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவர் ஆன முத்துராஜா இன்று புதுக்கோட்டை நகர மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் மருத்துவமனை உயர் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வில் மகப்பேறு முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்தும் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர்

மேலும் மருத்துவத்துறை அதிகாரிகளோடு குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவர் மாநகர முத்து ராஜா பேசுகையில்

புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் 21 மாதங்களில் 247 சிசுக்கள் இறந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் தகவல் பெற்றுள்ளார் இந்த தகவல் உண்மை என்றாலும் இந்த இறப்பு விகிதம் என்பது மாநில சராசரியை விட குறைவானதாகும் தமிழ்நாட்டில் 10 சதவீதம் குழந்தைகள் இறப்பு என்பது உள்ளது ஆனால் புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் இந்த சதவீதமானது 4.8 தான் உள்ளது

247 சிசுக்கள் இழந்துள்ளதாக கூறியதில் அதில் 160 சிசுக்கள் மட்டுமே மகப்பேறும்போது ராணி யார் மருத்துவமனையில் இறந்துள்ளது

மீதமுள்ள சிசுக்கள் தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு இங்கு கொண்டு வந்ததால் இறப்பு நடந்துள்ளது என்ன சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தகவல் தெரிவித்தார்