அடைக்கி அம்மன் கோவில் கரக எடுப்பு விழா

343

பொன்னமராவதி அருகே உள்ள தீத்தான்பட்டியில் சின்ன அடைக்கிஅம்மன் கோவில் கரகஎடுப்பு விழா ஐந்தாண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது.



புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அருகே தீத்தான்பட்டியில் உள்ள சின்ன அடைக்கி அம்மன் கோவில் கரக எடுப்புவிழா ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். ஐந்தாண்டுகளுக்கு பிறகு இந்த வருட கரக எடுப்பு விழா பாரம்பரிய முறையில் விமர்சையாக நடைபெற்றது. மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கிய விழாவில் எடுக்கப்பட்ட அலங்கரிக்கபட்ட கரகமானது கொன்னையூர், தூத்தூர்,ரெட்டியாபட்டி,வெள்ளையாண்டி. காட்டுப்பட்டி.கண்டியாநத்தம்.நாத்துப்பட்டி, தச்சம்பட்டி மணப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கரகம் எடுத்துசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

இறுதி நாள் அன்று தங்களது பூர்வீக முறைப்படி அம்பு .‌ ஈட்டி அருவாள் உள்ளிட்ட தங்களது ஆயுதங்களுடன் சாமியாடிகள் சாமியாடி வழிபாடு நடத்தினர்.

இந்த நிகழ்வில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். கரகம் எடுத்து சாமி ஆடி வந்தால் தங்களது பகுதி விவசாயம் செழிக்கும் என்பதும்,நன்றாக மழை வரும்என்றும் மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் உடல் ஆரோக்கியம் மேன்மை பெறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.அனைத்து மக்களும் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கரக எடுப்பு விழா நடத்தப்படுவதாக இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.