புதுக்கோட்டை திருவப்பூரில் வீதிகள் தோறும் முத்துமாரி அம்மனின் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆங்காங்கே தேர்கள், காவடிகள், பால்குடம் என புதுக்கோட்டை நகரமே விழாக்கோலத்தில் இருக்க சிறுவர்கள் தங்கள் கைவண்ணத்தில் வண்ண காகிதங்களை ஒட்டி மின் விளக்குகளை பொருத்தி அழகான தேர்களை உருவாக்கினர்.
சிறிய தேரில் வண்ண விளக்குகள் வைத்து அலங்காரம் செய்து அதில் பல்வேறு அழகு வண்ண மலர்களை எடுத்துவந்து திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வணங்கி மகிழ்ந்தனர்.