திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா

319

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து தம்பதிகள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் இரவில் திரளான பக்தர்கள் பூக்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்களை எடுத்தும், அம்மன் உருவப்படத்தை அலங்கரித்தும் எடுத்து ஊர்வலமாக மேள, தாளம் முழங்க வந்தனர்.

புதுக்கோட்டையில் இருந்து செண்டை மேளம் முழங்க யானை மற்றும் குதிரைகள் பல்லக்குகளில் திருவப்பூர் முத்துமாரி அம்மனுக்கு பூக்களை எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர்

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு பக்தர்களால் கொண்டுவரப்பட்ட பூக்களால் நிறைந்துள்ள ஆலயம். 🙏