திருவப்பூர் ஜல்லிகட்டு

387

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி தேரோட்ட்டம் பூச்சொரிதல் விழா, காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.வழக்கம்போல் இந்த ஆண்டும் வருகிற 26ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. முன்னதாக பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அன்று காலை 10 மணிக்கு திருவப்பூர் கவிநாடு திடலில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா போட்டிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நகர செயலாளர் செந்தில்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழிகளை ஏற்றனர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் தஞ்சாவூர் திருச்சி மணப்பாறை மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து 800க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் 500 க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை திருவப்பூர் கவிநாடு ஊரார்கள் பொதுமக்கள் விழா கமிட்டியினர் செய்திருந்தனர் இதே போல் அதி காலையில் இருந்து திருவப்பூர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவில் பூச்சொரிதல் விழாவில் விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு மலர்களை சிறு தட்டுகளிலும் சப்பரம் மற்றும் பல்லக்குகளில் கொண்டு வந்து முத்து மாரி அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வருகின்றனர்

திருவப்பூர் ஜல்லிகட்டு போட்டி அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார் அருகில் மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் எம்எம்ஏ முத்துராஜா நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலரும் உள்ளனர் முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்..

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை ஒன்றியம் கவிநாடு ஊராட்சியில் நடைபெற்ற 60ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்து வெற்றிபெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.