புதுக்கோட்டை: தொழிலாளியின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி

5914

நம்ம முதலாளி.. நல்ல முதலாளி..

17 வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்த மாரிமுத்து என்பவர் தனது திருமணத்திற்கு நிறுவனத்தின் முதலாளி ஹெல்வின் யாவ்-ஐ அழைத்திருந்தார்; அதன்படி, புதுக்கோட்டை வந்த ஹெல்வின், திருமணம் முடியும் வரை உடன் இருந்து மக்களோடு பந்தியில் அமர்ந்து விருந்தில் கலந்து கொண்டார்.

தனது திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு வந்திருந்த தன் முதலாளியைக் குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, தடபுடல் வரவேற்பு அளித்து அசத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் மாரிமுத்து. இவர் கடந்த 17 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், சொந்த ஊரில் அவருக்குத் திருமணத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. இதனையடுத்து, இந்தியாவிற்கு வந்து அந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என்று தன் முதலாளி கேல்வின் இயோவிற்கு திரு மாரிமுத்து அழைப்பு விடுத்தார்.அதனைத் திரு கேல்வினும் ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, அண்மையில் புதுக்கோட்டை சென்றிருந்த திரு கேல்வினை மாலையிட்டு வரவேற்று, செண்டை மேளம் முழங்க, உறவினர்களும் நண்பர்களும் புடைசூழ, இரட்டைக் குதிரை பூட்டிய வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார் திரு மாரிமுத்து.பின்னர் அவரின் உறவினர் ஒருவர் திரு கேல்வினுக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்துக்கு வந்த கெல்வின்யாவ் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்தார். பின்னர் அவருக்கு ஊரின் எல்லையில் இருந்து சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து செண்டை மேளம் முழங்க மாரிமுத்துவின் உறவினர்கள் தடபுடலாக வரவேற்பு அளித்தனர். திருமணம் முடிந்த பிறகு மணமக்களை வாழ்த்தி விட்டு அங்கு வந்திருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், நண்பர்களோடு பந்தியில் அமர்ந்து அசைவ உணவுகளை சாப்பிட்டார்.

இப்பயணத்தின்போது, புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளையில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும் சென்றிருந்தார் திரு கேல்வின். அங்கு மாணவர்களோடு சேர்ந்து மரக்கன்றுகளை நட்ட அவர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அத்துடன், அப்பள்ளியின் மேம்பாட்டிற்காக 50,000 ரூபாய் நன்கொடை வழங்கினார். ஒட்டுமொத்தத்தில், திரு கேல்வினின் வருகை திருக்கட்டளைவாசிகள் மறக்க முடியாத வகையில்
அமைந்தது என்றால் அது மிகையாகாது.