புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் அறந்தாங்கியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அக தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு அரசு அரசானை வெளியிடப்பட்டது..
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் உள்ளன. அதில் ஒன்று புதுக்கோட்டை, மற்றொன்று அறந்தாங்கி ஆகும். நகராட்சி பகுதியான இங்கு பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டால் அந்த மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்ட பின்னர் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தலைமை மருத்துவமனை
இந்த நிலையில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பும் வெளியானது. ஆனால் அதற்கான அரசு ஆணை இன்னும் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டிடங்கள் கட்ட நிதி ஓதுக்கப்பட்டு உள்ளது.அறந்தாங்கியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அக தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு அரசு அரசானை வெளியிடப்பட்டது

13 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாலும், புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாலும், இந்த 19 மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவமனை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும்.”

“தமிழ்நாட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இல்லாத 24 மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் உயர்தர மருத்துவ
சேவைகளை வழங்கிட புதிய மாவட்ட
தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர்,
மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலூர்,
திருத்தணி, வள்ளியூர். திருப்பத்தூர், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம்

மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் மற்றும் தென்காசி, குளித்தலை, திருச்செங்கோடு, அம்பாசமுத்திரம் மற்றும்இராஜபாளையம் ஆகிய 5 அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் ரூபாய் 1018.85 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும்.”
