திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் மாசி பெருந்திருவிழா நிகழ்ச்சி விவரங்கள் 🔥🔥🔥

646

புதுக்கோட்டைத் தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தல வரலாறு மாரியம்மனுக்கு எல்லாம் முதன்மை, மாரியாக விளங்கிவரும் திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன்

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பூமியில் புதைந்து கிடந்து பூசாரி ஒருவரின் அருள் வாக்கின்மூலம் வெளிப்பட்டாள். அருள்வாக்கின்படி அம்மனின் திருவுருவை பூமியில் இருந்து தோண்டி எடுத்து பச்சை கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மன்னருக்கு சொந்தமானதாக இருந்ததால் சமஸ்தானமாக பெரும் புகழோடு விளங்கியது. பொருளாதார செலாவணிக்காக அம்மன் காசு அடித்து தனியாக நிர்வாகம் செய்த திறமையும், அந்தஸ்த்தும் புதுக்கோட்டைக்கே உரியதாக இருந்தது புதுக்கோட்டையை அப்பொழுது ஆண்டு வந்த மன்னரின் மகனுக்கு கடுமையான அம்மை நோய் கண்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. முத்துமாரியம்மன் திருக்கோயில் வந்து தனது மகனை காப்பாற்றி தருமாறு மன்றாடினார். ஆனால், விதிப்பயன் காரணமாக அரசரின் மகன் மரணமடைந்தான். மன்னர் ஆத்திரத்திலும், அதிர்ச்சியிலும் தன் நிலை மறந்தார். அந்த இடத்தில் இருந்து அம்மனை வேறு இடம் மாற்ற உத்தரவிட்டார். அரசரின் ஆணைப்படி அம்மன் சிலையை வேறு இடம் கொண்டு செல்லுகையில் திருவப்பூர் கிராமத்தினர் வழிமறித்துக் கெஞ்சி அம்பாளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். (அந்த இடம் தற்பொழுது கட்டு மாரியம்மன் திருக்கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது) அன்று இரவு அரசரின் கனவில் முத்துமாரி அம்மன் தோன்றி உனது மகன் விதி வசத்தால் உன்னை விட்டு பிரிந்தாலும் அவனை எனது மகனாக ஏற்றுக்கொண்டேன் எனக் கூறினாள். தவறை உணர்ந்த மன்னர் அம்மனை முன்பு இருந்த இடத்திலேயே தற்பொழுது இத்திருக்கோயில் அமைந்துள்ள இடம்) பிரதிஷ்டை செய்யுமாறு உத்திரவிட்டார். மக்கள் அன்றிலிருந்து தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமளித்து கருணையுடன் குறை தீர்க்கும் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 14-ந்தேதி (28.02.2023) ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை எப்தமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 3.30 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், மாசி 21-ந் தேதி (05.03.2023) ஞாயிற்றுக்கிழமை திரியோதசி திதியும், ஆயில்யம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் மாசி பெருந்திருவிழா ஆரம்பமாகி, பங்குனி மாதம் 4-ம் தேதி (20.03.2023) திங்கட்கிழமை வரை நடைபெற உள்ளது. இப்பெருவிழாவில் மண்டகப்படிதாரர்களும், ஆன்மீக மெய்யன்பர்களும் அதிக அளவில் கலந்துகொண்டு அருள்மிகு முத்துமாரியம்மன் திருவருள் பெற வேண்டுகிறோம்.

மாசி மாதம் 19-ந் தேதி (05.03.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு மாசிப் பெருந்திருவிழா துவங்குவதற்கு முன் திருவப்பூர் மற்றும் கவிநாடு கிராமத் தெய்வமான அருள்மிகு களரி பெரிய அய்யனாருக்கு நாட்டார்கள் மற்றும் ஊரார்களால் திருவப்பூர் குலாலர் தெருவில் உள்ள புரவித்திடலில் இருந்து புரவி திருவப்பூர். எடுத்து வீதி உலா வந்து அருள்மிகு களரி பெரிய அய்யனார் கோயிலுக்கு எடுத்து சென்று நிறுத்தப்படும். அய்யனாருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்து பிரசாதம் வழங்கப்படும்.

அன்று (05.03.2023) மாலை 6.00 மணியளவில் திருக்கோகர்ணம் அருள்மிகு திருக்கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் திருக்கோயிலிலிருந்து உற்சவர் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலுக்கு வந்துசேரும். திருக்கோயிலில் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கு பின்னர் விழா துவங்கும்.

காலையிலும், மாலையிலும் திருவப்பூர் காட்டுமாரியம்மன் திருக்கோயிலுக்கு எழுந்தருளி புஷ்பமின் அலங்காரத்துடன் பலவிதமான கலை நிகழ்ச்சியுடன் உலா வந்து திருக்கோயில் வந்துசேரும்,

பங்குனி 5-ந் தேதி (21.03.2023) செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு அம்பாள் திருக்கோயில் வந்து சேர்ந்ததும் திருவிழா நிறைவு செய்யும் வகையில் அம்பாளுக்கு காப்பு களைந்து மஞ்சள் நீராட்டுவிழா சிறப்பாக நடைபெறும்.

அதன்பின் திருக்கோகர்ணம் அக்ரஹார மகாஜனங்கள் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்பாளை எழுந்தருளச் செய்து வீதி உலா வந்து திருக்கோகர்ணம் திருக்கோயிலுக்கு வந்துசேரும்.