கார் டிக்கியில் ஆடு திருடிய பலே கில்லாடிகள்….
பக்குவமாக பிடித்த தெத்துவாசப்பட்டி கிராம மக்கள்….
*கந்தர்வகோட்டை அருகே கார்டிக்கியில் ஆடு திருடியவர்களை தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்*
தஞ்சை – புதுகை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தெத்துவாசல்பட்டி அருகே ஒரு நபரை மோதிய நிலையில் பொதுமக்கள் சந்தேகத்தின்பேரில் காரை சோதனை செய்தனர்….
இப்போதுதான் பல வருடங்களாக டிக்கியில் ஆடுகளை திருடி வந்த திருடர்கள் அகப்பட்டு கொண்டனர்
எப்படி ஆடு வந்தது என்று பொதுமக்கள் கேட்கவே முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லிய பலே கில்லாடிகளுக்கு
புரியும் வகையில் மக்கள் உடல் முழுவதும் பதில் தரவே….
தாங்கள் சிவகங்கை மாவட்டம் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாலுபேரில் இருவர் தப்பி ஓடிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது…..
இவர்கள் மீது
காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது..

