கரூர்: மாயனூர் கதவணை அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 பேரும் பலி.
கரூர் அருகே பள்ளி விளையாட்டு போட்டிக்காக அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் சுழல் உள்ளதை அறியாமல் மாணவிகள் ஆற்றில் இறங்கியபோது நீரில் மூழ்கி இறந்ததாக தகவல்.
ஒரு மாணவியை காவிரி ஆற்றில் இறங்கிய போது சுழலில் தத்தலித்த போது காப்பாற்ற முயன்றபோது மற்ற 3 மாணவிகளும் நீரில் மூழ்கி பலி
இந்த நிலையில் ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளையும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சடலமாக மீட்டு உள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த
மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்து விளையாட்டில் கலந்து கொண்ட பின்னர் இன்று காலை கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்பொழுது சோபியா, தமிழரசி, இனியா, மற்றும் லாவண்யா ஆகிய நான்கு மாணவிகள் எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி மிகுந்த வேதனை அடைந்தேன்.
காவிரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!
உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்தஇரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின்
குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.