சுற்றுலாத்துறை சார்பில் தொல்லியல் பயிற்சி

338

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,
மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் முன்னதாக நடத்தப்பட்ட தொல்லியல் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கில் சான்றிதழ்களை வழங்கினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29 , 30 ந்தேதிகளில் சுற்றுலாத் துறை சார்பாக நடத்தப்பட்ட இரண்டு நாள் கல்வெட்டு வாசிப்பு பயிற்சியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள், பள்ளிக்கல்வித்துறை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்கள், சுற்றுலா,
தொல்லியல் மற்றும் வரலாற்று கல்லூரி மாணவர்கள்,தொல்லியல் ஆர்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது .

மாவட்ட சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற
கல்வெட்டுப் பயிற்சியின் போது மூத்த தொல்லியலாளர்களான முனைவர் சு.ராஜவேலு
தமிழி எழுத்துக்கள் பற்றியும், கரு.ராஜேந்திரன்
வட்டெழுத்துக்கள்பற்றியும்,
முனைவர்.ஜெ.ராஜா முகமது
கட்டுமான கலைகள் பற்றியும்,
ஆ மணிகண்டன் இடைக்கால தமிழ் கல்வெட்டுக்கள், தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும் பயிற்சி வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தொல்லியல் அலுவலர் பே.முத்துசாமி,உதவி அலுவலர் கே.பெமினா, மெ.சி சாலை செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் போது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் உறுப்பினர்கள் ஜி எஸ் தனபதி, எஸ்.கஸ்தூரி ரங்கன், அ. ரஹ்மத்துல்லா எம்.ராஜாங்கம், சை.மஸ்தான் பகுருதீன்,
சந்திரசேகரன், தியானேஸ்வரன், தனபால்
ஆகியோர் பங்கேற்றனர்.