புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு தேசிய நிறுவனம் இல்லை.. அதை செயல்படுத்தும் விதமாக பல முயற்சிகள் எடுத்து வரும் செயல்பாடுகள் புதுக்கோட்டை மக்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல முயற்சிகள் எடுத்து வரும் புதுக்கோட்டை மண்ணின் மைந்தர் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு. அப்துல்லா அவர்களின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்
தேசிய மருந்து கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் புதுக்கோட்டைக்குக் கேட்டு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்து இருந்தேன். புதிதாக கல்வி நிறுவனம் எதுவும் உருவாக்கும் திட்டம் தற்சமயம் இல்லை என்று பதில் அளித்தார். நேற்று மீண்டும் அவரைச் சந்தித்து நான் ‘’அருகில் உள்ள திருச்சியில் என்.ஐ.டி பொறியியல் நிறுவனம், ஐ ஐ எம் மற்றும் தேசிய சட்டப் பள்ளி உள்ளிட்டவை இருக்கின்றன. தஞ்சாவூரில் தேசிய நெல் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. காரைக்குடியில் கூட சிக்ரி நிறுவனம்
உள்ளது.
ஆனால் எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுநாள் வரை ஒரே ஒரு தேசிய நிறுவனம் கூட இல்லை. எனவே இதை மீண்டும் அருள் கூர்ந்து பரிசீலிக்க வேண்டும்’’ என்று கேட்டேன்.. சற்று நேரம் யோசித்தவர் ‘’கொள்கை முடிவு என்பதால் இதை வழங்கும் சாத்தியம் இல்லை.. ஆனால் உனக்கு ஒரு நர்சிங் கல்லூரி தர முயலுகிறேன்’’ என்று வாக்களித்தார். நல்லது நடக்கும் என நம்புகிறேன். பார்ப்போம்.. எம்.எம் அப்துல்லா அவர்களின் பதிவு..
நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் -மத்தியபட்ஜெட்டில் அறிவிப்பு!!