புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் அக்பர்அலி(வயது 43). எலக்ட்ரீசியன். இவருக்கு அப்துல் மாலிக் (12), அப்துல் ரகு மான் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் அப்துல் மாலிக் 6-ம் வகுப்பும், அப்துல்ரகுமான் 4-ம் வகுப்பும் புதுக்கோட் டையில் அரசு உயர்தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் பெற்றோர் கொடுக்கும் சிறு, சிறு பணத்தை உண்டியலில் சேமித்து வைப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் துருக்கியில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய சிறுவர்கள் இருவரும் எண்ணினர்.
இதன்படி அப்துல் மாலிக் உண்டியலில் சேமித்த ரூ.600, அப்துல்ரகுமான் சேமித்த ரூ.700 மற்றும் தந்தையின் |பங்களிப்பு ரூ.800 உடன் சேர்த்து ரூ.2,100-ஐ கலெக்டர் அலுவல கத்தில் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரிசெல்வியிடம் துருக்கி மக்களுக்காக நிவாரண நிதியாக வழங்கினர். மாணவர்களின் இந்த செயலை கண்டு அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.