கல்லாக்கோட்டையில் இருந்து சென்ற மதுபானம் ஏற்றி சென்ற லாரியில் மதுபான பெட்டிகளை தூக்கிய மர்மநபர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாகோட்டையில் இயங்கி வரும் சாராய ஆலையில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று மதுபானம் ஏற்றி கந்தர்வக்கோட்டை வழியாக கோமாபுரத்திற்கு அருகே செல்லும் போது மதுபானம் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை பின்தொடர்ந்த ஆம்னி வாகனத்தில் வந்த மர்ப நபர்கள் அதில் ஒருவர் லாரியில் ஏறி வாகனம் சென்று கொண்டிருக்கும் போதே லாரியில் ஏறி கயிறுகட்டிய தார்பாயை அறுத்து ஐந்து பெட்டிகளை தூக்கி இருக்கிறார்,
அதில் ஒரு பெட்டி தவறி விழுந்ததில் கோமாபுரம் அண்ணாநகர் பகுதி மக்கள் சத்தம் போட்டனர், சத்தத்தை கேட்ட ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு இறங்கி வந்து பின்னால் பார்த்த போது லாரியில் இருந்த மர்ப நபர்கள் தப்பித்து ஆம்னி வாகனத்தில் சென்று விட்டனர். இப்படி சரக்கு வாகனம் செல்லும் போது வாகனத்தில் ஏறி மர்ம நபர்கள் மதுபான பாட்டில்களை எடுத்து தூக்கி இருப்பது கோமாபுரத்தில் பரபரப்பாக பேசபடுகிறது.
நன்றி இளையராஜா