வசூலில் வாரிசு, துணிவை, மிஞ்சிய சாம்சங் எஸ்23 சீரிஸ்!

288



சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்23க்கு (Samsung Galaxy S23) முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ரூ.1,400 கோடி கிடைத்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு சாம்சங் நிறுவனத்தின் எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனாக சாம்சங் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது.

இந்த எஸ்23 சீரிஸ்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதை உறுதி செய்யும் விதமாக சாம்சங் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது சாம்சங் எஸ்23 சீரிஸ்களுக்கு முன்பதிவின் மூலம் முதல் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1.4 லட்சம் யூனிட்கள் முன்பதிவுகளை பெற்றுள்ளதாகவும், இதன்மூலம், 24 மணி நேரத்திற்குள் சுமார் ரூ.1,400 கோடி வசூல் ஆகியுள்ளதாகவும் சாம்சங் இந்தியா, மொபைல் வர்த்தகத்தின் மூத்த துணைத் தலைவர் ராஜு புல்லன் தெரிவித்துள்ளார்.


இந்த தகவலின்படி, இது கேலக்ஸி எஸ்22 சீரிஸை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் சாம்சங்கின் வியட்நாம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.



ஆனால் சமீபத்திய கேலக்ஸி எஸ்23 போன் தனது நொய்டா ஆலையில் தயாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த எஸ்23 சீரிஸின் அனைத்து போன்களும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

அதேபோல் இதன் ப்ரீமியம் ரக மாடலான எஸ்23 அல்ட்ரா 200 மெகாபிக்சல் பிரைமரி வைட் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர், 10 எம்பி ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 10 டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.
இத்துடன் எஸ் பென் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.



*விலை நிலவரம்:*

இதன் விலையை பொறுத்தவரை, எஸ்23 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.79,999 எனவும், எஸ்23 பிளஸ் மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.94,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் அதன் டாப் எண்ட் வேரியன்டான எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,24,999 எனவும்

12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,34,999 எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,54,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.