புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் (DISHA) தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் தலைமையில் இன்று (01.12. 2023) நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா, இ.ஆ.ப., சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜோதிமணி,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு. வை. முத்துராஜா, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ். டி. ராமச்சந்திரன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா. மாங்குடி, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.