மிக்ஜாம் புயல் பாதிப்பு.. சென்னைக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட மக்கள்..!

423

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் சென்னை மாநகரில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு அறந்தாங்கி வர்த்தக சங்கம், நகர மருந்து வணிகர்கள் சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடம் இருந்து அரிசி, கோதுமை, பிரட் பிஸ்கட், ரவா, பால்மாவு, தண்ணீர்பாட்டில், குளியல்சோப், ஜவுளிதுணிகள், அத்தியவாசிய மருந்து பொருட்கள்,போர்வை உள்ளிட்ட சுமார் ரூ 3.லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அறந்தாங்கி வட்டாட்சியர் ஜபருல்லா பெறப்பட்டு இன்று மாவட்ட ஆட்சியருக்கு வாகன மூலம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டது.

வருவாய் வட்டாட்சியர்,மண்டல துணை வட்டாட்சியர்,கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்திலிருந்து பொருட்களை தூக்கி வந்து வேனில் ஏற்றி அனுப்பிய நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் நமது பாரத்பால் நிறுவனம் சென்னைக்கு 3.5 லட்சம் மதிப்பிலான 5000 லிட்டர் பால் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா ஆகியோர் மாவட்டம் முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பினர்.

நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணியில் வர்த்தக சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.