புதுக்கோட்டையில் ரூ 10 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் மீட்பு

432


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐம்பொன் சிலைகளை கடத்தி வைத்து மக்களை ஏமாற்றி பணப்பறிப்பில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் படி சிலை கடத்தல் தடுப்பு ஏடிஜிபி சைலன்ஸ் குமார் யாதவ் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சமீம் பானு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் பாண்டியராஜன் செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மற்றும் மாறுவேடத்தில் சென்று கண் புகாணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்இந்த நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் சிலர் ஐம்பொன் சாமி சிலைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பணியில் மாலையீடு ரவுண்டா அருகில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு நடவடிக்கை மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்

அப்பொழுது ஒரு காரை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் 1.5 அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலை மற்றும் கஜ சம்ஹார மூர்த்தி சிலை மற்றும் உஷி நிஷா விஜய தாரணி அம்மன் சிலை ஆகியவை மறைத்து வைக்கப்பட்டது தெரிந்தது இதனை அடுத்து போலீசார் சிலைகளை கைப்பற்றி சிலைகளைக் கடத்தி வந்த 4 பேரிடம் விசாரணை செய்தனர் கடத்திவரப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூபாய் 10 கோடி மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது காரில் வந்த பத்மநாபன் புஷ்பராஜ் ராமச்சந்திரன் மன்னையா ஆகியோரிடம் விசாரித்த போது திண்டிவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் சந்திரசேகர் கடவுள்களை சேர்ந்த ஹரி பிரசாத் திருமலை மகேந்திரன் மகாபலிபுரத்தைச் சேர்ந்த கோபிநாத் கோகுல் பொன்னுலிங்கம் ஆகியோர் கொடுத்ததாக தெரிவித்தனர்

சிலைகளை கொண்டு வந்ததற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு போலீசார் 4 பேரையும் கைது செய்து 3 சிலைகளையும் பறிமுதல் செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்