புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

834

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமான ஒப்பந்தத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.. புதுக்கோட்டை சேர்ந்த பழனிசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்..

ஆன்லைன் விண்ணப்பத்தில் கையெழுத்து இல்லை என கூறி எனது டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் தனியார் பணிகளை மட்டுமே செய்து வந்த தகுதியில்லாத நிறுவனத்திற்கு வழங்கிய டென்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் புகார் அளித்தார்..

நகராட்சி துறை நிர்வாக இயக்குனர் புதுக்கோட்டை நகராட்சி ஆணைய ஒப்பந்த நிறுவனம் பதில் அளிக்க ஜகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது..

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே பல திட்டங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வராமலே பல திட்டங்கள் முடங்கி கிடக்கிறது..

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தகுதி இல்லாத நிறுவனத்திற்கு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. நகராட்சி நிர்வாக துறை பதிலளிக்க உத்தரவு.