புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி மீண்டும் வேண்டும் ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர்கள் சங்கத்தில் தீர்மானம்

479

ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஓய்வுபெற்ற திட்ட இயக்குநர் கண்ணன் தலைமையில், ஓய்வு பெற்ற திட்ட இயக்குநர் ஏவிசிசி கணேசன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் மணிவண்ணன், துணைதலைவர் பழனியாண்டி, பொதுச் செயலாளர் முத்தையா ஆகியோர்
சிறப்புரையாற்றினர்.

“குடும்ப உறுப்பினர்கள் குறிப்பேடு” என்கிற பல்வகைபயன் நிறைந்த குறிப்பேட்டை ஏவிசிசி கணேசன் வெளியிட்டு, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்தார்.

முன்னதாக சமூக செயற்பாட்டாளர் நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கேந்திர வித்யா பள்ளி திறப்பது, புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீண்டும் அமைக்க வலியுறுத்துவது, மானாமதுரை மார்க்கத்தில் திருச்செந்தாருக்கு புதிய ரயில் இயக்குவது, மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகைகளை மீண்டும் வழங்குவது, சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது, ஓய்வூதியர் குறை தீர்ப்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயாலார் பிடிஓ கண்ணன் தீர்மானவ்களை முன்மொழிந்தார் துணை பிடிஓ பொருளாளர் சின்னப்பா வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.ஓய்வுபெற்ற திட்ட இயக்குநர் அழகிரிசாமி அனைவரையும் வரவேற்க, ஓய்வுபெற்ற மகளிர் திட்ட இயக்குநர் சத்யபாலன் நன்றி கூறினார்.

நன்றி:புதுகை வரலாறு