புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பி. யு. சின்னப்பா தெருவில் ஷாஜகான் என்பவர் வீட்டின் வாசலில் நின்று நின்று கொண்டிருந்த பொழுது வீட்டின் அருகே உள்ள வாய்க்கால் மேலே ஏதோ ஒன்று ஊறி வருவது போல் தெரிந்துள்ளது இதனை அடுத்து ஷாஜகான் அருகே சென்று பார்த்த பொழுது அது அரிய வகை நட்சத்திர ஆமை என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த ஆமையை பிடித்து ஒரு வாலியில் வைத்துள்ளனர். இதனை அடுத்து புதுக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அருகே உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அரிய வகை நட்சத்திர ஆமையை ஆசிரியத்துடன் கண்டு ரசித்தனர்.
இதனை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் அறிய வகை நட்சத்திர ஆமையை வாங்கி சென்று வனப்பகுதியில் உள்ள குளத்தில் கொண்டு விட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது ஆகும்.
இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டுக்கு உரித்துடையது.
உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும்.