தீபாவளியன்று இரவு கொத்தனார் அடித்து கொலை: புதுக்கோட்டை அருகே சம்பவம்

154

தீபாவளியன்று இரவு கொத்தனார் அடித்து கொலைபுதுக்கோட்டை அருகே சம்பவம்..

புதுக்கோட்டை அருகே வடவாளம் கதுவாரிப்பட்டி அம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சின்னையா இவரது மகன் கலியமூர்த்தி 40 இவரது மனைவி சாமியம்மா இவர்களுக்கு நீண்ட நாள் குழந்தை இல்லாமல் தற்பொழுது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.



இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்
தீபாவளியை முன்னிட்டு இவரது நண்பர்கள் 4 பேருடன் சேகர் என்பவரது வயல் பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கொத்தனார் கலியமூர்த்தி தலையில் கல்லால் பயங்கரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்ததை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் விரைந்து வந்து இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் எஸ் ஐ செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை வரவழைத்தனர்

மோப்பநாய் சிறிது நேரம் ஓடிச்சென்று நின்று விட்டது இது தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது