நவம்பர் 13 விடுமுறை
தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13 அரசு விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக் கிழமை வருவதால் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று மக்கள் பலர் கோரிக்கை எழுப்பி வந்தனர். அதற்கு செவிசாய்த்த அரசு, அன்றைய தினத்தை விடுமுறையாக அறிவித்தது. நவ 13 அன்று பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.