பொன்னமராவதி தவறவிட்ட பெண்ணின் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியருக்கு குவியும் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காடாம்பட்டியை சேர்ந்தவர் கோகிலா ரஜினிகாந்த்.கூலித் தொழிலாளியான இவர் வங்கியில் இருந்து தனது நகையை திருப்புவதற்காக ரூ.43500 யை எடுத்துச் சென்றுள்ளார்.அந்நிலையில் அவரது பணம் செல்லும் வழியில் தொலைந்துள்ளது. வீட்டிற்கு சென்ற கோவிலா ரஜினிகாந்த் தனது பணம் தொலைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மேலச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் கணித பேராசிரியரான விமலா கல்லூரி முடிந்து வீட்டிற்க்கு திரும்பி சென்று கொண்டிருந்த பொழுது ஏனாதி அருகே ஒரு பணப்பை கிடப்பதை கண்டார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு பொன்னமராவதி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ரமேஷிடம் ஒப்படைத்தார். பணப்பையில் இருந்த முகவரியை விசாரித்த பொன்னமராவதி காவல் ஆய்வாளர் ரமேஷ் அந்த பணம் காடாம்பட்டியை சேர்ந்த கோகிலா ரஜினிகாந்த் என்பது தெரியவந்தது.அவரை செல்போனில் அழைத்து காவல் நிலையத்திற்கு வரவழைத்துஅவருடைய பணத்தை கோகிலாவிடம் ஒப்படைத்ததோடு விழிப்புடன் செயல்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.மேலும் கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியரான அமுதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Home தமிழ்நாடு புதுக்கோட்டை பணத்தை தவறவிட்டவரிடம் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியருக்கு குவியும் பாராட்டு