தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, இன்று (நவம்பர் 23) பல்வேறு மாவட்டங்களில் கல்வி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால், பள்ளி மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
🔴🔴 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
கனமழை காரணமாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.