புதுக்கோட்டையில் ரூபாய் 67.83 கோடி செலவில் புதிய பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ரூபாய் 8.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது சுகாதாரதுறை கட்டிடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை.முத்துராஜா MBBS MLA அவர்கள்.,இந்த கல்லூரி தமிழகத்திலேயே சென்னையை அடுத்து அரசு நேரடியாக அமைக்கும் இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகும்.
இந்த சிறப்புக்குறிய நிகழ்வில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் தலைமை வகிக்க, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், உடன் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் KK. செல்லபாண்டியன் அவர்களும், மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. மெர்சி ரம்யா IAS அவர்களும்,மாநிலங்களவை உறுப்பினர் உயர்திரு.MM அப்துல்லா அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு.நவாஸ் கனி அவர்களும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. சின்னத்துரை அவர்களும், நகர்மன்ற தலைவர் திருமதி.திலகவதி செந்தில் அவர்களும், துறை சார்ந்த அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும், மருத்துவ கல்லூரி மாணவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக தமிழகத்தின் அரசு சார்பில் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் மா. சுப்ரமணியன் ரகுபதி மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்..
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியதாவது
எம்ஆர்பி மூலம் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பும் விவகாரத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டதால் தற்பொழுது அந்த வழக்குகள் முடிவுக்கு வந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓரிரு தினத்திலோ அல்லது ஒரு வார காலத்திலோ அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றோம் அந்த தீர்ப்பு வந்துவிட்டால் உடனடியாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவால் எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய் கடி மற்றும் பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது
காரில் சென்னைக்கும் சேலத்திற்கும் செல்லும் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் வழியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு சென்று பாம்பு கடி நாய்க்கடி மருந்துகள் இருக்கிறதா அது எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு பேச வேண்டும்
எதிர்கட்சி தலைவர் என்பது பொறுப்பான பதவி எல்லா விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும்
தெரியாமல் பேசுவது அவரது நிர்வாக திறன்மையின்மையை அறியாமையை காட்டுகிறது புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்