புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேட்டி
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தும் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்தும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு மழை தொடர்பான எச்சரிக்கை வந்து கொண்டுள்ளது
தொடர்ச்சியாக மாவட்டத்தில் பாதிக்கப்படும் கட்டிடங்கள் எந்தெந்த இடங்களில் மழைநீர் தேங்கும் என்பது குறித்து பட்டியல் தயார் செய்து அந்த பகுதிகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்
மாவட்டத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வைரல் காய்ச்சல் மட்டுமே தற்போது வந்துள்ளது.
புதுக்கோட்டையில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077, 04322-222207 என்ற எண்ணை அழைக்கலாம்
தாழ்வான பகுதியில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
இவ்வாறு கலெக்டர் மெர்சி ரம்யா கூறினார்