ஆவுடையார்கோவில் அடுத்த வீழிமங்கலம் கிராமத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் உரசி பயங்கர தீ விபத்து சாலை ஓரத்தில் நின்ற ஐந்து இருசக்கர வாகனங்கள் தீயில் எறிந்து நாசம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா வீழிமங்கலம் கிராமத்திலிருந்து நாகர்கோவிலுக்கு ஈச்சர் வாகனத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் செல்வதற்கு வீழிமங்கலம் சாலையில் செல்லும் பொழுது சாலையின் குறுக்கே சென்ற ( EP லைன்) மின்சார கம்பி உரசி வைக்கோல் தீ பற்றி எரிந்துள்ளது.
இதை கவனிக்காமல் லாரியை ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார் இதனால் சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஸ்கூட்டி இரண்டு பேஷன் ப்ரோ பைக் ஒரு ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஆகிய ஐந்து வாகனங்கள் மீது ஈச்சர் வானத்தில் எரிந்து கொண்டிருந்த வைக்கோல் பைக் மீது விழுந்து பைக் அனைத்தும் முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் வானத்தை நிறுத்தி விட்டு ஆவுடையார்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்தனர் இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.