புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பள்ளிகளை பசுமை பள்ளியாக அறிவிக்கப்பட்டு தலா ரூ 20லட்சம் சிறப்பு நிதி அமைச்சர் மெய்யாநாதன் தகவல்

606

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பள்ளிகளை பசுமை பள்ளியாக அறிவிக்கப்பட்டு தலா ரூ 20லட்சம் சிறப்பு நிதி அமைச்சர் மெய்யாநாதன் தகவல்.


புதுக்கோட்டையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் புதுக்கோட்டை யில் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார் அப்போது அவர் கூறியதாவது.

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் வெப்பநிலை உயர்வு குறித்து மாணவர்களிடமே இன்று விழிப்புணர்வை தொடங்கியுள்ளோம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பள்ளிகளை பசுமை பள்ளியாக அறிவிக்கப்பட்டு கந்தர்வகோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை அரசு முன்மாதிரி பள்ளி, திருவரங்குளம் மேல்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளுக்குதலா 20 லட்சம் விதம் ரூபாய் மீதம் ரூபாய் ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருக்கட்டளையில் குப்பை கிடங்கில் நீண்ட காலமாக குப்பைகள் தேங்கி வைக்கப்பட்டதால் அந்த குப்பையில் இருந்து மீத்தேன் என்ற கொடிய விஷவாயு வெளியாகிறது பிளாஸ்டிக் கழிவுகள் எரிவதால் டையாக்ஸின் கொடிய வேதிப்பொருள் வெளியாகிறது இந்த குப்பை கிடங்குகளை அறவே அழிக்கும் வகையில் அதை பிரித்து எடுக்கப்பட்டு பயோமைனிங் சுத்தம் செய்யப்பட்டு மறுசுழற்சிக்கு கொண்டு வரப்பட உள்ளது நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் இதற்காக தமிழகம் முழுவதும் 250 கோடிஒதுக்கப்பட்டுள்ளது

இவ்வாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மய்யநாதன் பேசினார் மாவட்ட தொழில் சிறப்பாக செயல்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மரம் ராஜா உள்ளிட்ட ஆர்வலர்களுக்கு விருதுகளை வழங்கினார்.