மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் சாதனை

274

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்கள் பார்த்து மருத்துவர்கள் சாதனை..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்கள் அசத்தும் அரசு மருத்துவர்கள்.மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட திருக்களம்பூரை சேர்ந்த ஷகிலாபானு, கருப்புக்குடிப்பட்டியை சுகந்தி, வார்பட்டு அழகி, கருப்பர்கோயில்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி உள்ளிட்ட நான்கு பேருக்கும் டாக்டர் பூபதி ராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவின் ஒரு நேரத்தில் நான்கு பிரசவங்கள் பார்த்து 3 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை என நான்கு பிரசவங்கள் பார்த்து சாதனை படைத்து உள்ளனர்.

மேலும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் சாதனையை அறிந்த மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் ராம்கணேஷ் மருத்துவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.அதேபோன்று வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஒரு நேரத்தில் நான்கு பிரசவங்களை பார்த்த மருத்துவர்களை வெகுவாகப் பாராட்டியும். குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்மார்களுக்கு டாக்டர் அருள்மணி நாகராஜன் குழந்தைகள் நல பரிசு பெட்டகங்களை வழங்கியும் வாழ்த்துகளை தெருவித்தார்.இந்நிகழ்வில்
டாக்டர் பூபதிராஜன்,பிறப்பு பதிவாளர் உத்தமன்,மருந்தாளுநர் அன்பரசி, செவிலியர்கள் சீதா, அம்பிகா, சூர்யா, ஆய்வக நட்புடன் சீமா, சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார், மருத்துவமனை உதவியாளர் செல்வி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.