புதுக்கோட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!!!

612

புதுக்கோட்டையில் மனநல காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்ட மராட்டிய மாநில பெண் மீட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த மருத்துவ கல்லூரி மாணவி

புதுக்கோட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

மருத்துவக் கல்லூரி மாணவிக்கு குவிந்து வரும் பாராட்டு.


புதுக்கோட்டை அன்னவாசலில் இயங்கி வந்த தனியார் மனநல காப்பகத்தில் 50 க்கு மேற்பட்ட பெண்கள் அடைந்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அன்னவாசலில் நடத்திய திடீர் ஆய்வில் அனைவரும் மீட்கப்பட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


இதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சல்மா வயது 48 என்ற பெண் ஹிந்தி தெரியாது நிலையில் தனது குடும்பம் பற்றி யாருக்கும் தெரிவிக்க முடியாத நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார் அப்பொழுது மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு படிக்க வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரமிளா அவரிடம் எளிதாக பேசி அவர் மொழியை புரிந்து கொண்டு அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரிந்து கொண்டார்

சல்மாவை பற்றி தனது முகநூல் பக்கத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சல்மாவை பற்றி புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருவது பற்றியும் இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து இருக்கும் பரிதாபம் நிலைமை பற்றியும் பகிர்ந்து வந்துள்ளார்.


இதனை சமூக வலைதளங்களில் மூலம் தெரிந்து கொண்ட சல்மாவின் கணவர் மற்றும் மகன்கள் உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த சல்மாவின் கணவர் மற்றும் மகன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சல்மா தொலைந்து விட்டதாகவும் அவர் இறந்திருக்கலாம் என கருதியும் கிடைக்க மாட்டார் என நினைத்தும் சோகத்தில் இருந்து வந்ததாக கூறினர்

சல்மா மீண்டும் உயிருடன் கிடைத்த நிலையில் அவரை கட்டிப்பிடித்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி மருத்துவர்கள் மற்றும் அங்கு இருந்த நோயாளிகளை கண்கலங்க செய்தது இதனை அடுத்து கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் சல்மாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தார் மேலும் இந்த சம்பவத்தில் சல்மாவை அவரது குடும்பத்துடன் ஒப்படைத்த மருத்துவ கல்லூரி மாணவி பிரமிளாவை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்தார்

இந்த சம்பவத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டு நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது