விராலிமலை கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுக்கோட்டை அருகே உள்ள மிரட்டுநிலை கிராமத்தைச் சேர்ந்தவர் குடியரசு மகன் சிதம்பரம் வயது 39 இவர் விராலிமலை அடுத்துள்ள நீர் பழனி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்பொழுது சிதம்பரம் விராலிமலை அருண் கார்டன் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்
இந்த நிலையில் சிதம்பரம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்
இதையடுத்து கிராம உதவியாளர் பன்னீர் அருண் கார்டனில் உள்ள சிதம்பரம் தங்கி இருந்த வீட்டில் சென்று பார்த்துள்ளார்
அப்பொழுது கிராம நிர்வாக அதிகாரி என சிதம்பரம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி ஜீவானந்தத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார்
இது குறித்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி போலீசில் தகவல் தெரிவித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் விராலிமலை போலீசார் கிராம நிர்வாக அதிகாரி சிதம்பரத்தின் மரணம் குறித்து கொலையா தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்