தவறவிட்ட நகையை மீட்டு கொடுத்த பெண்ணுக்கு போலீசார் பாராட்டு!

409

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் 3 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தவறவிட்ட மூதாட்டி…
நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்த இளம் பெண்…


மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே தாமரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொட்டிச்சி அம்மா(53). இவரது மகள் திருமணமானகி சிப்காட் அருகே மாணிக்கம் பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தொட்டிச்சி அம்மா, தனது மகளுக்காக மூன்று பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப் பணம் பத்தாயிரம் ரூபாயுடன் புதுக்கோட்டை வந்துள்ளார். புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் நோக்கி செல்ல இருந்த தனியார் பேருந்தில் மாணிக்கம் பட்டி செல்ல மூதாட்டி பேருந்தில் அமர்ந்துள்ளார். அப்போது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக பேருந்து இருக்கையில் அருகில் அமர்ந்திருந்த புதுக்கோட்டை ஐடிஐ காலனியைச் சேர்ந்த இளம் பெண்ண் ஷாலினியிடம்(23) தங்க நகை மற்றும் ரொக்க பணம் இருந்த மஞ்ச பையை கொடுத்து விட்டு இறங்கியுள்ளார். அப்போது பேருந்து புறப்பட்ட போது
தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு திரும்பிய மூதாட்டி பேருந்து அங்கிருந்து கிளம்பி இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில் இருந்த காவல் கட்டுப்பாட்டறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் மூதாட்டியுடன் சென்று தேடிப் பார்த்துள்ளனர் அப்போது மூதாட்டியை காணவில்லை என்று அந்த பெண் பையுடன் பேருந்து நின்ற இடத்தில் அருகில் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்த பொழுது பையை கொடுத்துச் சென்ற இந்த அம்மாவை காணவில்லை என்று பையுடன் கீழே இறங்கி தேடியதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து நகை மற்றும் ரொக்க பணத்துடன் உள்ள பையை மூதாட்டி இடம் பத்திரமாக காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதையடுத்து நகை மற்றும் ரொக்க பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த இளம் பெண் ஷாலினிக்கு காவல்துறையினர் மற்றும் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.