இன்று பேரவையில் கேள்வி நேரத்தில் வினா எண் 5635 புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என்று கேள்வி எழுப்பிய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா அவர்கள்
மாண்புமிகு நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் பதில் உரை புதுக்கோட்டையை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் மாண்புமிகு முதல்வரிடம் கலந்து ஆலோசித்து புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று கூறினார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கேள்வி
கடந்த கால அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டை நகராட்சி மக்களுக்கு 30 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்கப்பட்டது தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஆட்சி காலத்தில் வாரம் ஒரு முறை மட்டுமே தண்ணீர் கொடுத்து வருகிறது நகராட்சி பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தினந்தோறும் தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்
மாண்புமிகு நகராட்சி துறை அமைச்சர் அவர்களின் பதில்
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை நகராட்சிக்கு தண்ணீர் செல்லும் இடங்களில் பைப் லைன்கள் அடைத்துள்ளது கழக அரசு அமைந்த உடன் புதுக்கோட்டை நகராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தனி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க உள்ளது விரைவில் புதுக்கோட்டை நகராட்சி பகுதி மக்களுக்கு தினம்தோறும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று பதிலுரை கூறினார்