திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000 வழங்கப்படும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை வழங்குவதால் அரசுக்கு கூடுதலாக இவ்வாண்டு ரூ.1.5 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.