துணிவு,வாரிசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை!!

469

வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு ஜனவரி 13 முதல் 16 வரை அனுமதியில்லை என்று திரைத்துறை இணை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை(ஜன.11) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படங்களுக்கான சிறப்புக் காட்சிகள் நாளை அதிகாலை 1 மணிமுதல் திரையிடப்படவுள்ளன.

இந்நிலையில், திரைத்துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் காலை 5 மற்றும் 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் அனுமதியில்லை. அரசி நிர்ணயித்த டிக்கெட் விலையை விட அதிகமாக விற்கும் திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்குகளுக்கு வெளியே பெரிய பேனர்கள் அமைத்து பால் ஊற்றுவது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் அதிகளவில் மக்கள் திரைப்படம் பார்க்க வருவார்கள்.. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்காதது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.