புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை தொடரும்

1416

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதல் லேசான முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

தற்போதைய வானிலை அப்டேட்👇👇

டெல்டாவில் விட்டு விட்டு நாளை வரை மழை பெய்யும் ..
விவசாயிகள் வயல்களை தயார்படுத்தி கொள்ளவும் ..

இதுவரை பெய்த மழை 50% மீண்டும் மழை தொடரும்.

தென் மாவட்டங்களில் இன்று இரவு முதல் மழை இருக்கும்.

வரும் சனிக்கிழமை வரை மழை தொடரும்.பிறகு மழை படிப்படியாக குறையும்.
மீண்டும் வறண்டகாற்று வருகை காரணமாக பனி அதிகரிக்கும்.

இன்றும் நாளை மட்டும் தானியங்கள் முடிந்த அளவு பாதுகாப்பாக பத்திரபடுத்துங்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பெய்துள்ள மழை விபரம்.

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்தநெல்கதிர்கள் நீரில் மூழ்கி வருகின்றன இதனால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

சென்ற ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்யப்பட்ட நெல்லுக்கான காப்பீட்டுத் தொகைகள் இதுவரை விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் தற்போது மேலும் பயிர்கள் சேதம் ஆகி வருவது கண்டு விவசாயிகள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.



விவசாயிகளின் இன்சூரன்ஸ் தொகை வராதது பற்றிய கவலைகளை புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகம் கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழக அரசு விரைவாக பயிர்கள் சேதத்தை கணக்கிட்டு நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.