வேலங்குடி ஸ்ரீ கருப்பர் கோவில் திருவிழா 2023

191

சாம்பிராணி வாசகர் வேலங்குடி
ஸ்ரீ கருப்பர் கோவில் திருவிழா ( 2023 )மூலவர் கருப்பனுக்கு சிலை கிடையாது பீடம் மட்டுமே ஒரு கூரையின் கீழ் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் தனியாக பெரிய கோவில் அமைப்பு பக்தர்களால் ஏற்படுத்தியும்ஸ்ரீ சாம்பிராணி வாசகர் அதற்க்கு கும்பாபிஷேகம் நடத்த அனுமதி தரவில்லை – புதியதிருக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் அரிவாள்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது இவர் ஒரு வாசனைப் பிரியர் (பக்தர்கள் -கவனத்திற்க்கு)

சம்பங்கிபூ மரிக்கொழுந்து. இவருக்குபிடித்த பூக்கள்- சந்தனம்பன்னீர்..அரகஜா._ஜவ்வாது புனுகு -இவருக்கு பிடித்த வாசனைதிரவியங்கள் – 24 மணி நேரமும் கோவில் திறந்து இருக்கும் கோவிலில் பொங்கல் வைக்க அனுமதி கிடையாது . (பொங்கல் வைக்க வேண்டும் என்றால் பூசாரி வைத்து தருவார்) .இவர் சாம்பிராணி பிரியர் – கோவிலில் 24 மணி நேரமும் சாம்பிராணி எரிந்து கொண்டு கோவில் வளாகம் முழுவதும் மணக்கும் இக்கோவிலில் களரி திருவிழா 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர் அன்னதானம் நடைபெற மட்டுமே கோவிலை சுற்றி கூரை போட அனுமதி உண்டு – பின் கூரையை அகற்றிவிடுவர்.
இறைவனேகூரையின்கீழ்இருப்பதால்…கோவிலில் எந்த கட்டுமான பணிகளும் கருப்பரின் உத்தரவு இல்லாமல் நடைபெறுவதில்லை கோவில் முகவரி ஸ்ரீ சாம்பிராணி கருப்பர் ஆலயம் -வேலங்குடி கிராமம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ளது!

வேலங்குடி ஸ்ரீ கருப்பர் கோவில் திருவிழா 2023
15-02-2023 – காப்பு கட்டுதல்
16-02-2023- கப்பரை
18-02-2023 – சிவராத்திரி
20-02-2023 – பாரி வேட்டை
22-02-2023 – முதல் நாள் திருவிழா
23-02-2023 – இரண்டாம் நாள் திருவிழா
24-02-2023 – மூன்றாம் நாள் திருவிழா
25-02-2023 – மஞ்சள் நீராடுதல்…