இளைஞருக்கு ஆயுள் தண்டனை

743

புதுக்கோட்டை: பக்கத்து வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுமியை மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்து, குழந்தை பிறக்க காரணமாக இருந்த அஜித்குமார் (22) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது.புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார்(22). இவர், கடந்த ஆண்டு, 15 வயதுடைய ஒரு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர், அஜித்குமார் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், நீதிபதி சத்யா நேற்றுதீர்ப்பளித்தார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட அஜித்க்குமார் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராத மும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கை முறையாக புலன் விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி, நீதிமன்ற காவலர் கார்த்திகா ஆகியோரை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே பாராட்டினார். தீர்ப்புக்குப் பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு அஜித்குமாரை போலீசார் அழைத்துச் சென்றனர்.