புதுக்கோட்டை நகராட்சியில் புதிய ஒருங்கிணைந்த சந்தை

851

புதுக்கோட்டை நகராட்சி பழைய சந்தையை புனரமைப்பு செய்து புதிய ஒருங்கிணைந்த சந்தை ஆக மாற்றப்பட உள்ளது..

புதுக்கோட்டை வாரசந்தையில், 160 கடைகளுடன் ஒருங்கிணைந்த காய்கறி வளாகம் 6.45 கோடி செலவில் அமையவிருக்கிறது. அதில் அலுவலக அறை, நான்கு புறமும் நுழைவாயில், குடிநீர் வசதி, காய்கறி இருப்பு அறை, தொழிலாளர்கள் ஓய்வு அறை, கழிப்பறை, உணவகம் ஆகியவையும் அமைகிறது.

இதற்கான பணிகள் இந்த மாதத்தில் பூமி பூஜையோடு தொடங்கப்பட்டு சில மாதங்களில் முடிவு பெறும் வகையில் விரைந்து நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்.