மன்னர் கல்லூரியில் புதிய வகுப்பறை திறப்பு..

1235

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரி கட்டிடங்களை ₹202 .07 கோடி மதிப்புள்ள வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக சென்னையில் திறந்து வைத்தார்.


அதன் அடிப்படையில் புதுக்கோட்டையில் மாட்சியமை தாங்கிய மன்னர் கல்லூரியில் புதிய வகுப்பறையுடன் கூடிய கட்டிடம் மற்றும் ஆய்வகத்தை திறந்து வைத்த நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா MBBS அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த போது இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் திரு திருச்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் கல்லூரி பேராசிரியர்கள் அரசு அதிகாரிகள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்