திருவரங்குளம் அருகே விபத்து

3914

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பேருந்து, டாட்டா ஏஸ் நேருக்குநேர் மோதி விபத்து..


இன்று நடைபெற்று முடிந்த வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்துவிட்டு சென்று கொண்டிருந்த பொழுது திருவரங்குளம் காட்டிற்குள் அரசு பேருந்தும், டாடா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதிகொண்டது.



காளைகள் உடன் மாட்டு உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் அடங்கிய ஆறு பேர் விராலிமலை நோக்கி திருவரங்குளம் அருகே உள்ள புஷ்கரம் காலேஜ் அருகே சென்றபோது பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் மூன்று காளைகளும் வாகனத்தில் வந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள் காயமடைந்தவர்களை உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.

வன்னியன் விடுதியில் பங்கேற்று விட்டு விராலிமலை திரும்பிய மூன்று காளைகள், காளைகளின் உரிமையாளர்கள் மூன்று பேர். திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக பலியானார்கள்.