நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது
முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’. நடிகர் விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியும் இணைந்து தில் ராஜூ தயாரிப்பில் உருவான திரைப்படம் வாரிசு.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில்
உருவான ‘வாரிசு’ ஜன. 11இல் திரையரங்குகளில் வெளியானது. இரு திரைப்படமும் படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டதால் இருவரின் ரசிகர்களும்கொண்டாட்டத்தில் உள்ளனர்.
குறிப்பாக, துணிவு நள்ளிரவு 1மணிக்கு வெளியானதால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள்
முந்தியடித்துக்கொண்டு குவிந்தனர். இதனால் பல
இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன. மேலும், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இரு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும்
போதெல்லாம் யார் நம்பர்.1 என்ற சர்ச்சை
ரசிகர்கள் மத்தியில் உருவாகிறது. ட்விட்டரில் வாரிசு முந்தியது, துணிவு முந்தியது என ஏகப்பட்ட வசூல் விவரங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் துனிவு மற்றும் வாரிசு இரண்டும் ஒரே நேரத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் துனிவு வசூல் ரீதியாக முதல் இடத்தில் உள்ளது
இன்றைய நிலவரப்படி
#Thunivu WW – 146 crs
#Varisu WW – 93 crs