பொங்கல் சிறப்பு வழிபாடு!
இன்று தை1(15/1/2023) பொங்கல் தினத்தில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே நடைபெறும் மூன்றாம்கால பூஜை காலசந்தி பூஜை காலை 10.30 மணிக்கு நடைபெறும் பூஜையில் படைகல்லில் வாழை இலை போட்டு பனிரெண்டு வகையான கூட்டுப் பொறியளுடன் மற்றும் தேன்குழல், அதிரசம், வடை, முருக்கு, சுசியம் போன்ற பலவகை பலகாரங்களுடனும் கரும்பு வைத்து திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் அருள்தரு சிவயோக நாயகி உடனாய அருள்மிகு ஸ்ரீ ஆத்மநாதசுவாமிக்கு நெய்வேத்யங்களுடன் படையல் மற்றும் மற்ற சன்னதிகளுக்கு பொங்கலும் கரும்பும் வைத்து நொய்வேத்யம் நடைபெற்றது.
மற்ற நாட்களில் ஆறுகால பூஜையிலும் புளுங்கள் அரிசி சாதம் கைபடாமல் சமைத்து ஆவி பறக்க கருவறையில் உள்ள படைக்கல்லில் கொட்டி ஆவி பறக்க படைப்பது வழக்கம்.
உலகப்புகழ் பெற்ற சிற்ப்பங்களை உள்ளடக்கிய
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் அருள்தரு சிவயோக நாயகி உடனாய அருள்மிகு ஸ்ரீ ஆத்மநாதசுவாமி மற்றும் அருள்திரு மாணிக்கவாசகர் திருக்கோயில்
உலக சிற்ப அதிசயங்களில் ஒன்றாகும்.