இறைச்சி கடைகளுக்கு நாளை விடுமுறை

661

புதுக்கோட்டை மக்களே இன்னைகே வாங்குங்க: நாளை கிடைக்காது!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை இறைச்சிக்கடைகள் இயங்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் இறைச்சிக்கடைகளை திறக்கக்கூடாது. சட்ட விரோத இறைச்சி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆடுவதை செய்யும் கூடத்தில் ஆடுகளை வதை செய்ய அனுமதியில்லை. எனவே, அன்றைய தினம் ஆடுவதைக் கூடம் செயல்படாது.

மேலும், அனைத்து ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். விதியை மீறி இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவா்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இறைச்சிப்பிரியர்கள், நாளைக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி ஸ்டோர் செய்து கொள்வது நல்லது.