இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..
இறையூர் வேங்கைவயல் காலனி மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் நீரை அசுத்தப்படுத்தியது சம்பந்தமான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் வட்டம் வெள்ளனூர் காவல் சரகத்திற்குட்பட்ட இறையூர் வேங்கைவயல் காலனியில் கடந்த 26.12.2023-ஆம் தேதி ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் நீரை அசுத்தப்படுத்தியது சம்பந்தமான வழக்கு வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், வழக்கு விசாரணையை தீவிர படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி இன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு செ. சைலேந்திர பாபு. இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
