நான் ரெடி அஜித் சார் ரெடியா ? !! வெளிப்படையாகப் பேசிய கேஜிஎப் திரைப்பட இயக்குநர்!!

746

பிரசாந்த் நீல் இயக்கிய, கேஜிஎஃப்: அத்தியாயம் 1 மற்றும் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 யாஷ் நடித்த ராக்கியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் குறிக்கிறது. இரண்டாம் பாகத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, எடிட்டர் உஜ்வல் குல்கர்னி மற்றும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் கடந்த 14ம் திகதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் Kgf.இந்தத் திரைப்படத்தை பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். முதல் பாகம் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது அதுவும் சூப்பர் ஹிட்டாக பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

அத்தோடு இப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி 700 கோடிக்கு மேல் இதுவரை வசூல் செய்துள்ளது.

கிட்டத்தட்ட நான்கு வருட காத்திருப்பிற்கு பின் வெளியாகிய இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது தமிழில் முன்னணி நடிகரான அஜித் சார் ஒரு லேஜண்ட் ஹீரோ அவர் ஒரு வாய்ப்புக் கொடுத்தா அவர் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு படம் பண்ண நான் ரெடியா இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.இதனால் அஜித் ரசிகர்கள் குஷியடைந்துள்ளதோடு இருவரும் கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். மேலும் அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் நடித்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது .பிரசாந்த் நீல் இயக்கிய யாஷின் கேஜிஎஃப்: அத்தியாயம் 2, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.900 கோடியைத் தாண்டியுள்ளது. படத்தின் வெற்றியை தயாரிப்பாளர்கள் சிறப்பு விருந்துடன் கொண்டாடினர். யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் மகிழ்ச்சியாக இருந்தனர். கேக்கில் எழுதப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது கேஜிஎஃப்: அத்தியாயம் 2 இன் தொடர்ச்சியைக் குறிக்கிறது.