புதுக்கோட்டை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

1844

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை 08.09.2022 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிக்கை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, இ.ஆ.ப., ஆகிய நான், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மற்றும் நகரம் அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா 08.09.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 24.09.2022 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கின்றேன்.

இந்த உள்ளூர் விடுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், மேலும் அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும், இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.